3rd of April 2014
சென்னை::இப்போதெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்து யாருடைய படத்தில்
நடிப்பது என்கிற விசயத்தில் ரொம்பவே தடுமாறிப்போகிறார்கள் பிரபல
ஹீரோக்கள். அந்த வகையில், ஐ படத்தை முடித்த விக்ரமிடம் பல இயக்குனர்கள்
கதை சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், யார் படத்தில் முதலில் நடிப்பது
என்பதை இன்னமும் அவர் முடிவெடுக்கவில்லையாம்.
அதேபோல்தான்
கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்யும், அடுத்த படம்
குறித்து இன்னும முடிவெடுக்காமல் இருக்கிறாராம். விஜய்யிடம் கதை
சொல்லியிருப்பதாக டைரக்டர்கள் சமுத்திரகனி, அட்லி இருவருமே வெளிப்படையாக
கூறி வருகின்றனர். ஆனபோதும், அதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து எந்தவித
ரெஸ்பான்சும் வரவில்லையாம்.
ஆனால் இதுபற்றி
விஜய் வட்டாரத்தை விசாரித்தால், அடுத்து விஜய்யை இயக்க பல டைரக்டர்கள் கதை
சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு அந்த கதைகள்
பிடித்திருந்தாலும் அப்படங்களில் உடனடியாக நடிக்கும் முடிவில் இல்லை. அவர்
மனதில் வேறு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படத்தில்தான்
அடுத்து பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனால் கத்தி முடிந்த பிறகுதான்
அதுபற்றிய பேச்சுவார்த்தையை விஜய் தொடங்குவார் என்கிறார்கள்...
Comments
Post a Comment