17th of April 2014
சென்னை::நகைச்சுவை நடிகரான கஞ்சாகருப்புவுக்கு புதிய பட வரவுகள் சுத்தமாக இல்லை.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே
நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படங்களில் படப்பிடிப்பு கூட தற்போது
நடைபெறவில்லை.
அவரது நிலைமை இப்படி இருக்க, தன்னை சந்தானம்
ரேன்ஜுக்கு நினைத்துக்கொண்டு கஞ்சாகருப்பு காட்டும் பந்தாவுக்கு மட்டும்
அளவே இல்லை. போதாக்குறைக்கு அவரை சுற்றி இருக்கும் உறவினர் கூட்டமும்
கருப்புவுக்கு தூபம்போட்டு அவரை உசுப்பிவிட்டு வருகிறது
சில
தினங்களுக்கு முன் காந்தர்வன் என்ற படம் வெளியானது. சலங்கைதுரை என்பவர்
இயக்கிய இந்தப் படம் பெரும்போராட்டத்துக்குப் பிறகே திரைக்கு வந்தது.
காந்தர்வன்
படத்தில் கஞ்சாகருப்புவுக்கு அநியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த
சலங்கைதுரை, படத்தின் புரமோஷனுக்கு அவரை அழைத்திருக்கிறார். வருவதாக அவர்
சொன்னதை நம்பி மீடியாக்களை வர வைத்திருக்கிறார்.
இதோ வர்றேன் அதோ
வர்றேன் ஒருநாள் முழுக்க சாக்குபோக்கு சொல்லி இருக்கிறார் கஞ்சாகருப்பு.
அவரது இழுத்தடிப்பு காரணமாக கடுப்பாகிவிட்டார் சலங்கைதுரை.
கஞ்சாகருப்புவின் அலட்டலை நேரடியாய் பார்த்து தெரிந்து கொண்ட மீடியாக்களும் செம கடுப்பில் இருக்கின்றன...
Comments
Post a Comment