16th of April 2014
சென்னை::அந்நியன் படத்தையடுத்து ஷங்கர்-விக்ரம் கூட்டணி அமைத்துள்ள ஐ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. ஏற்கனவே தனது படங்களை ஹாலிவுட் தரத்தில் இயக்கும் ஷங்கர், இந்த படத்தை ஹாலிவுட் டைரக்டர்களையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் சில வித்தியாசமான ஷாட்களையும் பதிவு செய்திருக்கிறாராம்.

அதனால் அப்படிப்பட்ட படத்தை
உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
அதனால், தமிழ்நாட்டில் ஐ படத்தின் ஆடியோ விழாவை நடத்தி படத்தை
தமிழ்நாட்டுக்குள்ளேயே முடக்க வேணடாம் என்று நினைத்த ஷங்கர், தனது
இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் பட ஆடியோ விழாவை மலேசியாவில் நடத்தியது
போல், இப்போது ஐ படத்தின் ஆடியோ விழாவை கனடாவில் நடத்த
திட்டமிட்டுள்ளார்.
அதற்கு முக்கிய காரணம்,
ஹாலிவுட்டில் உள்ள பிரபல நடிகர்-நடிகைகளை அந்த விழாவுக்கு வரவைத்து
படத்திற்கு உலக அளவிலான பப்ளிசிட்டியை தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதானாம்.
அதையடுத்து விழாவில் கலந்து கொள்ள சிலருக்கு அழைப்பு விடுத்தபோது,
ஹாலிவுட நடிகர் அர்னால்ட் ஏற்கனவே ஒப்புதல அளித்து விட்டாராம். அதையடுத்து
மற்ற ஹாலிவுட் பிரபலங்களையும விழாவுக்கு வரவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது...
Comments
Post a Comment