ஸ்டண்ட் மாஸ்டரை கௌரவித்த பஞ்ச் மாஸ்டர்!!!

10th of April 2014
சென்னை::சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவடைந்தது. படப்படிப்பு முடிந்து பூசணி உடைக்கும் தினத்தன்று அதனை மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாட தீர்மானித்தனர் படக்குழுவினர்.
 
அதற்கேற்ற மாதிரி படத்தில் பணிபுரிந்த மூத்த ஸ்டண்ட் இயக்குனரான விஜயனின் பிறந்தநாளும் அன்றுதான் வந்தது.
 
பிறகென்ன..! சந்தானம் பட்டுவேட்டி சட்டையிலும், கதாநாயகி அஸ்ணா ஜாவேரி பட்டுப்புடவையிலும் வர விஜயனின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடி அவரை சந்தோசப்படுத்திவிட்டனர்.
 
சண்டைக்காட்சிகளிலும் தன்னை சோபிக்கவைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குனருக்கு சந்தானம் செய்திருக்கும் கௌரவம் தான் இது என்றே சொல்லவேண்டும்.....
 

Comments