15th of April 2014
சென்னை::கலைப்புலி தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிக்கும் அரிமாநம்பி
படத்தின் இசைவெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்ட திரையுலக வி.ஐ.பி.க்கள் ஏன்டா விழாவுக்கு
வந்தோம் என்று நொந்துபோய்விட்டனர். அந்தளவுக்கு அவர்களை பிரபு, மற்றும்
விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் நோகடித்து விட்டனர். போதாக்குறைக்கு விக்ரம்
பிரபுவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பவுன்சர்கள் என்கிற குண்டர்களும்
அநியாயத்துக்கு கடுப்பேற்றி விட்டனர். இத்தனைக்கு விக்ரம் பிரபு நடித்து
கும்கி, இவன் வேற மாதிரி என இரண்டு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன.
அதற்குள்
விக்ரம் பிரபுவுக்கு இத்தனை ரசிகர்கள் கூட்டமாக என திரையுலகினர்
எண்ணுமளவுக்கு தியேட்டர் முழுக்க நிரம்பி இருந்தனர் ரசிகர்கள். உபயம்
கலைப்புலி தாணு. தன் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபுவுக்கு ரசிகர்கள்
பட்டாளம் இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்க, பணம் கொடுத்து ரசிகர்களை வர
வைத்திருக்கிறார் தாணு. இப்படி விசில் அடிக்க வரவழைக்கப்பட்ட ரசிகர்களின்
அலப்பறையின் காரணமாக திரையுலக வி.ஐ.பி.க்கள் பலர் நொந்துபோய் பாதியிலேயே
வெளியேறினர். இன்னொரு பக்கம், பவுன்சர்களின் அராஜகம்! பிரபல
தயாரிப்பாளர்களைக் கூட மரியாதைக்குறைவாக பவுன்சர்கள் நடத்திய விதம்
சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது..
Comments
Post a Comment