பெண்கள் மீது அக்கறை கொண்டு உருவாக்கப் பட்டதே ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்!!!

14th of April 2014
சென்னை::குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராமகிருஷ்ணன் இப்போது இயக்கி நடித்து ரிலீசுக்கு தயாராக் இருக்கும் படம் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’.

இதில் நாயகிகளாக ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் ஆத்மியாவும் காருண்யாவும் நடிக்கின்றனர். இவர்களோடு ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு M.V.பன்னீர்செல்வம். தமிழ்ப்படம் கண்ணன் இசையமைக்கிறார். பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

படத்தை இயக்கி நடிக்கும் M.A.ராமகிருஷ்ணனிடம் படம் பற்றி கேட்டோம்…. பெண்கள் பலம், பலவீனம் ஆண்கள் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை அந்த நம்பிக்கையை பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றுவதில்லை. காதலிக்கும் போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்திற்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் அலட்சியமே! இதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் சில ஆண்கள் தற்போதைய தொழில் நுட்பங்களை (Social Network )தவறாக பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல இடையூறுகள் தந்து சமூக அவலங்களுக்கு ஆளாக்குவதோடு, அவர்களின் வாழ்கையையும் சீரழிக்கிறார்கள்.

அப்படி ஒரு தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், அவர்களின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப் பட்டதே இந்த போங்கடி நீங்களும் உங்க காதலும் திரைப்படம் என்றார். படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Comments