நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யா உடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்!!!

13th of April 2014
சென்னை::கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக அறிமுகமானது லக் என்ற ஹிந்திப்படத்தில்தான். தமிழில் அவர் கதாநாயகியாய் நடித்த முதல் படம் 7 ஆம் அறிவு. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிஹாசன், அதன் பிறகு தெலுங்கு, ஹிந்திப்படங்களில் பிஸியாகிவிட்டார். பின்னர் அவர் தமிழில் நடித்தது 3 படத்தில்தான். இந்தப் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் தனுஷ் உடன் நடித்தபோது இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாக, அது ரஜினி குடும்பத்தில் புயலைக்கிளப்பியது.
 
ரஜினி கமல் இருவரும் எடுத்த முடிவின்படி ஸ்ருதிஹாசன் மும்பையில் செட்டிலானார். அதன்பிறகு தமிழ்ப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போட்டோஷூட் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்த ஸ்ருதிஹாசன், வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டார். அவர் சொன்னகதை பிடித்துப்போகவே, அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். 7 ஆம் அறிவு படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா உடன் ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன்.
 

Comments