அஜித் என் குடும்பத்தில் ஒருவர் : இது கெளதம்மேனனின் நெகிழ்ச்சி!!!


 14th of April 2014
சென்னை::இந்த நேரத்தில் இது நடந்தே ஆக வேண்டும் என்றிருந்தால் அது கண்டிப்பாக நடந்தே தீரும். அஜித்- கெளதம்மேனன் விஷயத்திலும் அது தான் இப்போது நடந்திருக்கிறது. சூர்யா கை விட்ட பிறகு தனியாக நின்ற கெளதம் மேனனுக்கு வலிய வந்து கை கொடுத்திருக்கிறார் அஜித்....


இதற்கும் இருவருமே சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் இணைய வேண்டியது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.

இப்போது அஜித்தின் 55-வது படத்தை கெளதம்மேனன் தான் டைரக்ட் செய்து வருகிறார். தொடர் தோல்விகளாலும், நண்பர்கள் செய்த துரோகத்தாலும் மனம் வெதும்பிப் போயிருந்த கெளதமுக்கு அஜித் தான் இப்போது மாமனிதராகத் தெரிகிறார்.

நடிகர், டைரக்டர் என்ற எந்த பாகுபாடையும் அஜித்திடம் பார்க்க முடிவதில்லை. அவர் என்னோடு ஒரு குடும்ப உறுப்பினர் போலவே பழகுகிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற வேறுபாடு பார்க்காமல் அவர் எல்லோரிடமும் ஒரே விதமாக பழகுவது ஆச்சர்யமாக உள்ளது. அதைப் பார்க்கையில் அஜீத் என் கண்களுக்கு ஒரு மாமனிதராக தெரிகிறார் என்று தனது மனசில் பட்டத்தை  சொல்லியிருக்கிறார் கெளதம்.
துசரி கஷ்டப்படுற நேரத்துல கை கொடுக்கிறவங்க தானே நல்ல
மனிதராவே இருக்க முடியும்.. 

Comments