தெனாலிராமன்’ பிரச்சனை – தற்கொலைப் படையாக மாறுவோம்: ஜாகுவார் தங்கம்!!!

12th of April 2014
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வெளிவர உள்ள ‘தெனாலிராமன்’ படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமான், வ.கௌதமன் ஆகியோர் வடிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.
 
இந்த விவகாரம் தற்போது, தமிழர்களை தெலுங்கர்கள் எதிர்ப்பதா என வேறு பாதைக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
தமிழ்த் திரையுலக அமைப்புக்களில் கூட தமிழரல்லாத பல பேர் முக்கியமான பொறுப்புக்களில் உள்ள சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற ‘காதல் பஞ்சாயத்து’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘தெனாலிராமன்’ பிரச்சனை குறித்து ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்  ஆவேசமாகப் பேசினார்.
 
ஒரு தமிழன் நடித்த தெனாலிராமன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சிலர் அறிக்கை விடுகிறார்கள்,ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவர்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் .நீங்கள் தடுத்து பாருங்கள் நாங்கள் திரண்டு வந்து தற்கொலை படையாக மாறிக் கூட படத்தை திரையிட வைப்போம் மீறி தடுத்து பாருங்கள்,” என்று பேசினார்.
 
தெனாலிராமன்’ திரைப்படம் அடுத்த வெள்ளியன்று, 18 ஏப்ரல், வெளி வருவதற்குள் இந்த பிரச்சனை மேலும் சூடு பிடிக்கும்  எனத் தெரிகிறது...
 

Comments