11th of April 2014
சென்னை::தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி! சமீபத்தில் வெளியான ‘மான்கராத்தே’யில் தூள் கிளப்பிய ஹன்சிகா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்!
அதில் ’‘என் மேனேஜர் என்று கூறிக்கொண்டு ஒரு சில நபர்கள் சில தயாரிப்பாளர்களிடம் நான் நடிக்கும் படங்கள், கால்ஷீட் போன்ற பல விஷயங்களை பேசி வருவதாக அறிந்தேன்! ஆனால் நான் தனிப்பட்ட முறையில் யாரையும் மேனேஜராக நியமிக்கவும் இல்லை, என் படங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச யாருக்கும் அதிகாரம் வழங்கவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நான் நடிக்கும் படங்கள், என் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் என் அம்மா தான் கவனித்து வருகிறார்! அதனால் அதுபோன்ற நபர்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்...
Comments
Post a Comment