சுனைனா – அனுஷா- இப்போ மீண்டும் சுனைனா!!!!!

1st of April 2014
சென்னை::.நியூமராலஜிப்படி பெயரை மாற்றிக்கொள்வதுதான் பேஷனாகிவிட்டதே..
கடந்த அக்டோபர் மாதம் நம்ம சுனைனா தன் பெயரை அனுஷா என மாற்றி வைத்துக்கொண்டதும் அந்த வகையில்தான். தாமிரபரணி பானு தன் பெயரை ‘முக்தா எல்சா ஜார்ஜ்’ என மாற்றிக்கொண்டபோதும் நடிகை பூர்ணா தன் பெயரை ‘ஷாம்னா காசிம்’ என மாற்றிக்கொண்டபோதும் நாம் எப்படி ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக அந்த விஷயத்தை எடுத்துக்கொண்டோமோ அப்படித்தான் இதையும் எடுத்துக்கொண்டோம்.
.
“நான் பிறந்தபோது எனக்கு குறிப்பிட்ட ஒரு எழுத்தில் முடியும்படி பெயர் வைக்குமாறு ஒரு பண்டிட் கூறினாராம். அதனால் எனக்கு சுனைனா என பெயர் வைத்தார்கள். இப்போது ஒரு பண்டிட்டிடம் என் ஜாதகத்தை காட்டியபோது ‘ஷா’ என்ற எழுத்தில் பெயர் முடியும்படி வைத்தால் எனக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என என் பெற்றோரிடம்
 
சொல்லியிருக்கிறார்.அதனால் அவர்கள் விருப்பத்திற்காக ‘அனுஷா’ என எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்” என தனது பெயர் மாற்றத்திற்கு விளக்கமும் கொடுத்தார் சுனைனா.
ஆனால் பெயரை மாற்றி இப்போது ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை.. மீண்டும் தனது பெயரை சுனைனா என்றே மாற்றிவிட்டார். நியூமராலஜிப்படி ஆங்கிலத்தில் தனது பெயரின் கடைசியில் எக்ஸ்ட்ராவாக ஒரு ‘a’ மட்டும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அனுஷா என பெயர் மாற்றியபின் அந்தப்பெயரை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருந்ததுதான் காரணமாம்.
இவரது பெற்றோர் இன்னும் சில மாதங்களுக்கு அடுத்து இன்னொரு பண்டிட்டை தேடிப்போகாமல் இருந்தால் சரி என நாம் அக்டோபர் மாதமே செய்தி வெளியிட்டிருந்தோம்.. அது எவ்வளவு உண்மை ஆகிவிட்ட்து பார்த்தீர்களா..?    

Comments