Andhra Mess Movie New Stills!!!படமே கதை சொல்ற மாதிரி தான் இருக்கும் பாஸ் : இது ‘ஆந்திரா மெஸ்’ ஸ்பெஷல்ங்க!!!

Tags : Andhra Mess Movie New Photos, Andhra Mess Movie Latest Gallery, Andhra Mess Movie New Pictures, Andhra Mess Film Latest images, Andhra Mess Movie Stills, Andhra Mess Movie New Pics>>>











24th of April 2014
சென்னை::கதையே இல்லாமல் படம் எடுக்கும் டைரக்டர்களுக்கு மத்தியில், மொத்தப்படமே கதை சொல்வது போலத்தான் இருக்கும் என்று சொல்லி ஆச்சரியப்பட வைத்தார் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் டைரக்டர் ஜெய்.
பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக வேலை பார்த்த ஜெய் அதன் பிறகு விளம்பப் பரங்களை இயக்கும் ஆர்வத்தில் மும்பை போய்விட்டார். அங்கு பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு இந்த ‘ஆந்திரா மெஸ்’சை ஆரம்பித்திருக்கிறார்.
 
ஷோபோட்  ஸ்டுடியோஸ் சார்பில் நிர்மல் கே. பாலா தயாரித்து வரும் இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டன. இனி சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. அதற்காக இந்த மாத இறுதியில் பூனே புறப்பட்டு செல்கின்றனர். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று ஹிந்தியில் இடம்பெறுகிறது. அப்பாடல் ராஜ்பரத் மற்றும் தேஜஸ்வினி இருவரின் மீது படமாக்கப்பட்டுள்ளது. நெருக்கமான காட்சிகளைக் கொண்ட பாடலாகவும் அதே சமயம் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது.
 
படத்தைப் பற்றி ஜெய்யிடம் கேட்டபோது :
 
இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவை கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன்.
 
இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதை சொல்லி, கேட்பவர்களுக்கு சுவைபட கதை சொல்வானோ அது போன்ற ஒரு முயற்சி. இதை ‘மேஜிக்கல் ரியலிசம்’ என்று சொல்வார்கள். இதில் வரும் இடங்கள் அழகியல் தன்மையோடு இருக்கும். யதார்த்த வாழ்வில் நாம் இது போன்று பார்த்திராத வகையில் இருக்கும் உடைகள் எந்தவொரு நிலபரப்பையும் சாராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள் புதிதானவர்கள்.
ஆனால் இவர்களின் வாழ்வு நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அதைப்போலவே ஆந்திரா மெஸ் கதை சொல்லும் முறையும் இருக்கும் என்றார்.
 

Comments