Actress Anjali Latest Stills in Saree!!! கடைசியில மிஞ்சினது காமெடியன் மட்டும் தானா..? : விரக்தியில் அஞ்சலி!!!

29th of April 2014
சென்னை::பறவையே எங்கிருக்கிறாய்… என்று அஞ்சலியின் முதல் படத்தில் வரும் பாடலைப் போலவே ஆகி விட்டது அவரது சினிமா வாழ்க்கை. கடந்த சில மாதங்களாக அஞ்சலி எங்கிருக்கிறார் என்பது தான் கோலிவுட் முதல் டோலிவுட் வரை எல்லோரும் பரபரப்பாக>>













பறவையே எங்கிருக்கிறாய்… என்று அஞ்சலியின் முதல் படத்தில் வரும் பாடலைப் போலவே ஆகி விட்டது அவரது சினிமா வாழ்க்கை. கடந்த சில மாதங்களாக அஞ்சலி எங்கிருக்கிறார் என்பது தான் கோலிவுட் முதல் டோலிவுட் வரை எல்லோரும் பரபரப்பாக தேடிய சமாச்சாரம். அங்காடித் தெரு, கலகலப்பு என அஞ்சலி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய சித்தி பாரதிதேவியுடன் தகறாறு ஏற்பட்டு சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு தப்பித்த்துப் போனார்.
 
அங்கும் ஒன்றிரென்று படங்களில் மட்டுமே நடித்தவர் திடீரென்று என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்தது. பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். அவர் எங்கிருக்கிறார் என்பதே பெரும் மர்மமாக இருந்தது. சமீபத்தில் அந்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி நான் எங்கும் ஓடவில்லை; இங்கு தான் இருக்கிறேன்; மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார். இருந்தாலும் அஞ்சலியை யாரும் கண்டுகொள்ளவில்லை.
 
இந்த நிலையில் பிரபல தெலுங்கு காமெடி நடிகரான சீனிவாச ரெட்டி ஒரு படத்தில் தனக்கு ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் ரொம்ப நாள் கழிச்சி ரீ-எண்ட்ரி கொடுக்கப்போற எனக்கு போயும் போயும் ஒரு காமெடி நடிகர் தான் ஹீரோவா கெடைச்சாரா..? என்ற விரக்தியில் இருக்கிறாராம் அஞ்சலி. இருந்தாலும் இதை விட்டால் வேறு வழியும் இல்லை என்ற முடிவில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார்.
 

Comments