Acharam Movie Stills!!!!கணேஷ் வெங்கட்ராமன்-பூனம்கவுர் நடிக்கும் 'அச்சாரம்!!!



 














5th of April 2014
சென்னை::Acharam New Movie Photos, Acharam Latest Movie Gallery, Acharam Unseen Movie Pictures, Acharam Film Latest images, Acharam Movie Hot Stills, Acharam Movie New Pics..

தாருண் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஸ் அம்பேத்கார் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு 'அச்சாரம்' என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும்  கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக பூனம்கவுர் நடிக்கிறார். மற்றும் ரேகா, ராஜலட்சுமி, ஓ.ஏ.கே.சுந்தர், ஐஸ்வர்யாதத்தா, ஞானதேஸ் அம்பேத்கார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்பத்தின் பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஆர்.கே.பிரதாப் ஒளிப்பதிவு செய்கிறார். டி.சந்தானம் கலையை நிர்மாணிக்க, ராபர்ட், ரேகா, விமல் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். சண்டைப்பயிற்சியை ஸ்பீட் சையத் கவனிக்க, படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மோகன் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர்கள் அமிர்தம், ரமணா, அரவிந்த் நாகராஜ், விஜி, அகமத் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநர் மோகன் கிருஷ்ணா கூறுகையில், "ரொமான்ஸ் மற்றும் திரில்லர் படமாக அச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. படம் மூன்று விதமான பரிணாமங்களில் சென்னை, கொடைக்கானல், தஞ்சாவூர் போன்ற இடங்களில் படமாகி இருக்கிறது. காலாச்சார பகிர்வாக அச்சாரம் உருவாகி இருக்கிறது.
கமர்ஷியல் மற்றும் காதலை கருவாக வைத்து உருவாக்கி இருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

Comments