24th of April 2014
சென்னை::கோச்சடையான்’ படத்துக்கு சிக்கல் என்று வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. திட்டமிட்டபடி மே 9-ம் தேதி ரிலீசாகி விடும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளது.
சென்னை::கோச்சடையான்’ படத்துக்கு சிக்கல் என்று வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. திட்டமிட்டபடி மே 9-ம் தேதி ரிலீசாகி விடும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளது.
‘
கோச்சடையான்’ படத்தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு 35 கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாக வந்த தகவலையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை ‘கோச்சடையான்’ படத்தின் ரிலீஸ் விளம்பரம்திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ‘கோச்சடையான்’ படம் மே 9- ஆம் தேதி ரிலீசாகுமா என்றும் சந்தேகம் எழுந்தது.
ஆனால் தற்போது அந்தப் பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு விட்டதால் திட்டமிட்டபடி ‘கோச்சடையான்’ படம் ரிலீசாகும் என்று வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த சங்கம் சார்பில் கூறப்படுவதாவது :
பொதுவாக ‘கோச்சடையான்’ மாதிரி பெரிய படங்கள் ரிலீசாகும் போது, வசூலை பங்கிட்டுக் கொள்வது, டிக்கெட் விலை, தியேட்டர்கள் ஒதுக்கிக் கொடுப்பது போன்ற விஷயங்களைப் பற்றி தயாரிப்பாளருக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும் பேச்சுவார்த்தை நடப்பது வழக்கமான ஒன்றுதான். கோச்சடையான் பட விஷயத்திலும் அதுதான் நடந்தது. பட சம்பந்தமான அந்த பேச்சுவார்த்தை சுமூகமாகி விட்டதால் திட்டமிட்டபடி வருகிற 9ம் தேதி ரிலீசாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
Comments
Post a Comment