போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்துக்காக 7 முறை படமாக்கப்பட்ட முத்த காட்சி!!!

21st of April 2014
சென்னை::கே.ஆர்.கே. மூவீஸ் சார்பில் பல படங்களை தயாரித்த கே.ஆர்.கண்ணன், ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இதில் எம்.ஏ.ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டும் செய்திருக்கிறார். கதாநாயகிகளாக ஆத்மியா, காருண்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
 
மற்றும் ஜெயப்பிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில், கண்ணன் இசையில் படம் உருவான இந்த படத்தை ரீச் ட்ரீம் மீடியா சார்பில் குமரன், கார்த்திகேயன், முத்துராமன், செல்வராஜ் ஆகியோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.
 
படத்தில் கதாநாயகன் ராமகிருஷ்ணன்–கதாநாயகி ஆத்மியா இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி இடம் பெறுகிறது. இந்த காட்சி, 7 முறை படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பற்றி டைரக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–
 
காதலிக்கும்போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்துக்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது. இதற்கு ஆண்களின் அலட்சியமே காரணம் என்ற கருவை அடிப்படையாக கொண்ட கதை இது.
 
தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அவர்களின் மீது அக்கறை கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது..
’’

Comments