கோடை விடுமுறையில் 7 புதுபடங்கள் ரிலீஸ்!!!!

8th of April 2014
சென்னை::கோடையில் 7 புதுப்படங்கள் ரிலீசாகிறது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஜோடியாக நடித்த ‘மான் கராத்தே’ படம் கடந்த வாரம் வந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்கள் வர இருக்கின்றன.

ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வருகிற 11–ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மே 1 அல்லது 16–ந் தேதி ரிலீசாகலாம் என தெரிகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட 6 மொழிகளில் இப்படம் வருகிறது.

விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படம் வருகிற 11–ந் தேதி ரிலீசாகிறது. தமிழ், புத்தாண்டையொட்டி இப்படம் வருவதால் தயாரிப்பு தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். கோச்சடையான் தள்ளிப்போனதும் இப்படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.

வடிவேலு இரு வேடங்களில் நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படம் வருகிற 18–ந் தேதி வெளியாகிறது. 20–ந் தேதி ஈஸ்டர் பண்டிகை வருவதும் இப்படத்துக்கு தியேட்டர்களில் கூட்டத்தை இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25–ந் தேதி துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள ‘வாயை மூடி பேசவும்’ படம் வருகிறது. அதே நாளில் ஜெய், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படமும் வெளியாகிறது.

சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள ‘ஜிகர்தண்டா’ படம் மே 1–ந் தேதி வெளியாகிறது. அதேநாளில் ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’ படமும் வருகிறது. கமல் நடித்து பலத்த எதிர்பார்ப்பில் உள்ள ‘விஸ்வரூபம்–2’ படம் மே மாதம் வெளியாக இருக்கிறது. இப்படங்கள் ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டமாக அமைய போகிறது. ....

Comments