அஜித்தின் 55வது படத்தின் தலைப்பு என்ன?!!!

15th of April 2014
சென்னை::கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தின் 55வது படத்தின் படபிடிப்பு துவங்கிய நாள் முதல் தினமும் ஒரு செய்தி வெளிவருகிறது.
வீரம் வெற்றிக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கிறார். படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். அஜித்தை போன்று அனுஷ்காவும் இதில் உடல் எடையை குறைத்து நடிக்கவிருக்கிறாராம்.
மேலும் அவர் முதன் முறையாக சொந்த குரலில் டப்பிங் பேச போகிறாராம். இதற்காக அவர் தமிழ் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பது உறுதி செய்யப்பட்டது. ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டான் மாக்ரதூர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு முதலில் ”என்னை நோக்கி பாயும் தோட்டா” என பெயர் வைக்க போவதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதுவும் மாறி “ஆயிரம் தோட்டாக்கள் என பெயர் வைக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது. இதை அதிகாரபூர்வமாக அஜித்தின் பிறந்தாள் நாளான மே 1ம் தேதி அறிவிக்க உள்ளனர்.. 

Comments