கத்தி படத்திற்காக 3 பாடல்கள் ரெடி!!!

22nd of April 2014
சென்னை::துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு விஜய் மற்றும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘கத்தி’.
 
இதில் விஜய் இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடி சமந்தா. படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வெற்றிக் கூட்டணியோடு புதிதாக அனிருத்தும் இணைந்திருப்பதால் படத்தின் இசை மற்றும் பாடல்கள் தொடர்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனிருத இரவு, பகலாக கடுமையாக உழைத்து வருகிறார்.

கத்தி படத்திற்காக இதுவரையில் மூன்று அதிரடி பாடல்கள் ரெடியாகி விட்டதாம். இந்தப் மூன்று பாடல்களும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு தரப்பிற்கு முழு திருப்தியை தந்துள்ளதாம்.

Comments