சென்னை::கெளதம் கார்த்தி, நிகிஷா படேல், நகுல் ப்ரீத் ஆகியோரது நடிப்பில்
உருவாகியுள்ள 'என்னமோ ஏதோ' பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளான படமாகியுள்ளது.
புதுமுகம் ரவி தியாகராஜா இயக்கியுள்ள இப்படம், ஏற்கனவே தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளதால், தமிழ் ரீமீக்கான இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள், இப்படத்தை தயாரித்துள்ள ரவிபிரசாத் குழுமத்தினர்.
திரைத்துறையில் பல்வேறு துறைகளில், பல ஆண்டுகளாக உள்ள ரவிபிரசாத் குழுவினர், தயாரிக்கும் முதல் படம் 'என்னமோ ஏதோ' என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது..

அஜித்தைப் போலவே கௌதம் கார்த்திக்கும் பைக் பிரியர்!!!
தல அஜித் பைக் பிரியர் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவரைப்போலவே
இன்னொரு இளம் ஹீரோவுக்கும் பைக் என்றால் உயிர். படப்பிடிப்பு இல்லை என்றால்
போதும், ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார்.
அலுக்கும்வரை ஊர் சுற்றிவிட்டு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாராம்.
அவர்..கௌதம் கார்த்திக். கடல் படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்
ஜாலியாய் பைக்கில் நகர்வலம் வந்தாராம் கௌதம் கார்த்திக். நடிகரான பிறகு
அப்படி வர முடியவில்லையாம். எனவே ஹெல்மெட் அணிந்து, முகத்தை மறைத்தபடி ஜாலி
ரைட் அடிக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்
ஊட்டியிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.
என்னது...ஊட்டியிலிருந்து...சென்னைக்கு...பைக்கிலேயே...என்று வாயை
திறக்காதீர்கள் ப்ளீஸ்...! இதொன்றும் கௌதம் கார்த்திக்குக்கு புதுசில்லை.
ஏறக்குறைய இருபது தடவைக்கு மேல், சென்னையிலிருந்து ஊட்டிக்கும்,
ஊட்டியிலிருந்து சென்னைக்கும் பைக்கிலேயே பயணித்திருக்கிறாராம்.
அடேங்கப்பா..தம்பி ரியல் ஹீரோதான் போலிருக்கு!.
Comments
Post a Comment