10th of April 2014
சென்னை::முன்னாள் நடிகை அமலா வாயில்லா பிராணிகளின் மீது அன்பு காட்டுபவர் என்பதும் மிருகவதைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் என்பதும் நமக்கு தெரியும். குறிப்பாக நாய்கள் வளர்ப்பதில் இவருக்கு அலாதி பிரியம்.

இவர் தனது வீட்டில் ஆறு இந்திய நாய்களையும் ஒரு லேப்ரடார் வகை நாயையும் வளர்த்து வருகிறார். மாதந்தோறும் இந்த ஒரு நாய்க்கு மட்டும் உணவு, மருந்து என பராமரிப்பு செலவே 25000 ரூபாய் ஆகி விடுகிறதாம். இருந்தாலும் எல்லாவித நாய்களுக்கும் இவ்வளவு செலவு செய்யவேண்டும் என்பதில்லை என்கிறார் அமலா.
ஒருமுறை தனது கணவர் நாகார்ஜூனாவை பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு நள்ளிரவில் குடித்துவிட்டு வந்து சுவர் ஏறி கலாட்டா செய்த 12 பேரை இந்த நாய் தனி ஆளாகவே விரட்டியடித்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார் அமலா...
Comments
Post a Comment