21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி!!!

11th of April 2014
சென்னை::நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தரின் தயாரிப்பில் 555 ஹீரோ பரத் நடிக்கவிருக்கின்றார். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் திருவண்ணாமலை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது பாலசந்தரின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க பரத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்திற்கு "ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு பெற்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூற இருக்கும் படம்தான் இது.
இந்த  படத்தில்  பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள்.  இத்தனை நகைச்சுவை நடிகர்கள் நடிப்பது ஏன்? என்பது பற்றி டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் கூறினார்.
‘காதலிக்க நேரமில்லை,’ ‘உள்ளத்தை அள்ளித்தா’ பாணியில் இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். அதனால்தான் 21 நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக பரத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நந்திதா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
இங்கே வடிவேலுவைப்போல் கன்னட பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமாரை இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறோம். ஒரு நீக்ரோ பாடகருடன் சேர்ந்து கானா பாலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘555’ படத்துக்கு இசையமைத்த சைமன், இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது...

Comments