8th of April 2014
சென்னை::நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘
சிறந்த நடிகைக்கான விருது ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜாவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குனராக பாலாவும், சிறந்த ஒளிப்பதிவாளராக செழியனும், சிறந்த இசையமைப்பாளராக ‘கடல்’, ‘மரியான்’ ஆகிய படங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்வாகியிருக்கின்றனர்.
சிறந்த பாடகிக்கான விருது ‘மரியான்’ படத்தில் எங்க போன ராசா என்ற பாடலை பாடியதற்காக சக்தி ஸ்ரீகோபாலனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘தங்கமீன்கள்’ படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த பாடலாசியர் விருது ‘தங்கமீன்கள்’ படத்திற்காக நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவை நடிகராக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரி தேர்வாகியிருக்கிறார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது ஆச்சி மனோரமாவிற்கு வழங்கப்படுகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘ஹரிதாஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது. கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு விருது ‘ராஜா ராணி’ படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது.

பரதேசி’
படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா தேர்வாகியிருக்கிறார்.....
Comments
Post a Comment