22nd of April 2014
சென்னை::மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவான முதல் இந்தியப் படம்’ என்ற பெருமையோடு வரும் மே 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்தான் இப்போது கோலிவுட்டின் ‘ஹாட்’ நியூஸ்! இப்படத்தைப் பற்றி தற்போது பல விஷயங்கள் கசிந்திருக்கின்றன.
'பீரியட் ஃபிலிம்’ ஆக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 19ஆம் தேதி மைசூரில் துவங்கவிருக்கிறதாம். அங்கு ஆரம்பிக்கும் ஷூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறுகிறதாம். அதோடு, தமிழ் சினிமாவிலேயே இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டாக 200 கோடி ரூபாயை ஒதுக்க இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு, இப்படத்தின் கதை நடக்கும் காலகட்டத்திற்கேற்ற செட், உடை, அலங்காரம் போன்றவற்றின் வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், டெக்னீஷியன்கள் விவரம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்!.

’’
Comments
Post a Comment