5th of April 2014
சென்னை::ஹாலிவுட்டின் மெகா மெகா படம் என்று 2010ல் வெளியான ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தை குறிப்பிடலாம். காரணம் சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு ஸ்வாஸ்நேகர், புரூஸ் வில்லிஸ், ஜேசன் ஸ்டேதம், ஜெட் லீ உட்பட 13 ஆக்சன் ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து கலக்கியிருந்தார்கள். சில்வஸ்டர் ஸ்டாலோனே இந்தப் படத்தை இயக்கியிருந்தது இன்னொரு சிறப்பு.

அதை தொடர்ந்து 2012ல் ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-2’ வெளியாகி அதுவும் சக்கைப்போடு போட்டது. இந்தப்படத்தில் ஸ்டாலோன் நடிப்பு, திரைக்கதையுடன் நின்றுகொள்ள சைமன் வெஸ்ட் என்பவர் படத்தை இயக்கினார். இப்போது அதன் தொடர்ச்சியாக ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-3’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தை இயக்கியுள்ள்ளார் பாட்ரிக்ஸ் ஹக்.
பொதுவாக ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தின் முந்தைய பாகங்கள் இரண்டுமே ஆகஸ்ட்(13, 17) மாதத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த சென்டிமெண்ட்டின்படி, வரும் ஆகஸ்ட் 15ல் அதாவது நம் இந்திய சுதந்திர தினத்தன்று ஹாலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்-3’ வெளியாக இருக்கிறது.....
Comments
Post a Comment