சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, 14 நாட்களில், 50 கோடி வசூல்!!!

17th of April 2014
சென்னை::சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தின் வசூல் உச்சத்தைத்தொட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான மான்கராத்தே படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் அமைந்தது. அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் அளவுக்கு படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் மக்கள் அலைமோதியது. முதல் மூன்று நாட்களில் பரபரப்பைக் கிளப்பிய மான் கராத்தே நான்காவது நாளுக்குப் பிறகு வசூல் குறைந்துவிட்டதாக திரையுலகில் பேச்சு அடிபட்டது.
 
இந்நிலையில் மான் கராத்தே படத்தின் வசூல் பற்றி அதிகாரபூர்வமான தகவல் கிடைத்திருக்கிறது. மான் கராத்தே படம் சென்னையில் மட்டும் 10 நாட்களில் 7.71 கோடி வசூல் செய்திருக்கிறதாம். உலகம் முழுக்க பத்து நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா? 35.61 கோடி. மான்கராத்தே படம் வெளியாகி இரண்டு வாரங்களாகிவிட்டநிலையில்...
உலகம் முழுக்க ஒட்டுமொத்தமாக சுமார் 50 கோடியை வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
 

Comments