12th of April 2014
சென்னை::சூர்யாவை தெரியாது என நான் சொல்லவே இல்லை‘ என்று கரீனா கபூர் பல்டியடித்தார்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்‘. இப்படத்தில் குத்து பாடலுக்கு கரீனா கபூர் நடனம் ஆட உள்ளார் என்று இணைய தளங்களில் தகவல் வெளியானது.

ஆனால் இதை மறுத்த கரீனா,‘ சூர்யாவா அவர் யார்? நான் பார்த்ததே இல்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார். இது சூர்யா ரசிகர்களை கொதிப்படையச் செய்தது. அவர்கள் கரீனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.இதையறிந்த கரீனா திடீர் பல்டி அடித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘சூர்யாவை நான் சந்தித்ததில்லை. ஆனால் அவர் யார் என்று நான் கேட்கவில்லை. சூர்யாவை பற்றி எனக்கு தெரியும். தமிழ் சினிமாவில் அவரும் ஒரு பெரிய ஸ்டார். தமிழில் அவர் நடித்த சிங்கம் 2‘ இந்தி ரீமேக்கில் நான் நடித்து வருகிறேன்.
ஆனால் அவர் நடிக்கும் புதிய படத்தில் நான் குத்துபாடலுக்கு ஆடுகிறேன் என்பது உண்மை இல்லை. அப்பட இயக்குனர் லிங்குசாமியை நான் சந்திக்காதபோது எப்படி குத்துபாடலுக்கு ஆடுவேன் என கூறலாம். சூர்யா திறமையானவர். அவர் இந்தி படத்தில் நடித்தால் ஜோடியாக நடிக்க தயாராக இருக்கிறேன்என்றார். ....
Comments
Post a Comment