12 Noon Short Feature Film Press Meet Photos!!! நடிகர்களால் ஒரே டேக்கில் நடிக்க முடியாது: காமெடியன் தாக்கு!!!






13th of April 2014
சென்னை::Tags : 12 Noon Short Feature Film Media Meet Stills, 12 Noon Short Feature Film Press Meet Gallery Pics, 12 Noon Short Feature Film Press Meet images, 12 Noon Short Feature Film Team Meet Media Peoples Pictures, 12 Noon Short Feature Film Press Meet Event Photos.
 
சிங்கிள் டேக்கில் சினிமா நடிகர்களால் நடிக்க முடியாது என்றார் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா.இதுபற்றி அவர் கூறியதாவது:சினிமாவில் நடிக்காமல் சில காலம் ஒதுங்கி இருந்தேன். நல்ல வேடங்கள் வந்ததால் அவ்வப்போது நடிக்கிறேன். ‘12 நூன்‘ என்ற தமிழ் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
 
கிஷோர்-ரங்கா டைரக்டு செய்துள்ளனர். குறுகிய நாட்களில் இப்படம் எடுக்க வேண்டி இருந்ததால் ஒரே டேக்கில் நடிக்கும் நடிகர்கள் தேவைப்பட்டார்கள். சினிமா நடிகர்களால் சிங்கிள் டேக்கில் நடிக்க முடியாது. அதனால் எனது நாடக குழுவில் நடிப்பவர்களை இதில் நடிக்க வைத்தேன். இந்த குறும்படம் தணிக்கை செய்யப்பட்டு மல்டி காம்பளக்ஸ் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவொரு புது முயற்சி. குறும்படம் என்பதால் இதற்கு சலுகை விலையில் டிக்கெட் விற்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றார்.::

Comments