12th of April 2014
சென்னை::தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் க்ளைமாக்ஸை 1000
துணை நடிகர்கள் வைத்து படமாக்கியுள்ளனர். மரியான் நய்யாண்டி படங்களின்
தோல்விக்கு பிறகு தனுஷ், கே.வி.ஆனந்த்தின் அனேகன், வேல்ராஜின் வேலையில்லா
பட்டதாரி, வெற்றிமாறன் இயக்கும் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து
வருகிறார். இதில் வேலையில்லா பட்டதாரி படம், தனுஷ் நடிக்கும் 25வது
படமாகும். மேலும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநராக களம் இறங்கியுள்ள
படமும் கூட. தனுஷே தயாரித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால்
நடிக்கிறார். சமுத்திரகனி, தனுஷின் அப்பாவாக நடிக்கிறார்.
தனுஷ்
இந்தப்படத்தின் கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக
நடித்துள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டத்தை
எட்டியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையை
அடுத்த புறநகர் பகுதியில் படமாக்கினார் வேல்ராஜ். இதற்காக சுமார் 1000 துணை
நடிகர்களை வரவழைத்து, 6 கேமிராமேன்களை கொண்டு படமாக்கி உள்ளார் வேல்ராஜ்.
இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் தனுஷ் இப்படத்தின் நடித்துள்ளார்..
Comments
Post a Comment