17th of April 2014
சென்னை::படம் ஓடினாலும் விழா, ஓடாவிட்டாலும் விழா என்று எதற்கு எடுத்தாலும், பிரம்மாண்ட பேனர், போஸ்டர் என்று உடனே விழா ஒன்றை நடத்தும் விஜய், தலைவன் படத்தில் எற்பட்ட பிரச்சனைக்குப் பிறகு ரொம்ப அடக்கி வாசித்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஜில்லா படத்தின் 100வது நாள் விழா மூலம் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பிக்க விஜய் தயாராகி வருகிறார்.
நாளை ஏப்ரல் 18ஆம் தேதி, சென்னையில் ஜில்லா படத்தின் 100வது நாள் விழா நடக்கிறது. சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் 18ஆம் தேதி மாலை நடைபெற உள்ள இந்த நிகச்சியில், ரசிகர்களின் அமர்க்களமான ஆரவாரத்திற்கு நடுவே, விஜய் தோன்றி பேச உள்ளார்.
இந்த நிலையில், மோடி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்தும், தனது அரசியல் பயணம் குறித்தும் இந்த விழாவில் விஜய் பேசுவாரோ, என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment