10 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மனோரமா வீடு திரும்பினார்!!!

8th of April 2014
சென்னை::நடிகை மனோரமாவுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்திருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டது கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
தொடர்ந்து 10 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மனோரமா நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆனார். தி.நகரில் உள்ள வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 1 வருடத்துக்கு மேலாகவே மனோரமா உடல்நிலை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சூர்யா நடித்த ‘சிங்கம் 2Õ படத்தில் நடித்தார். இப்போது பேராண்டி படத்தில் நடிக்க உள்ளார்...
 

Comments