Vishal Lakshmi Menon Lip!!!! காதல் தீ: வதந்திகளைக் கண்டு பயப்பட மாட்டேன் - விஷால்!!!!!

 31st of March 2014
சென்னை::பாண்டியநாடு படத்தில் லட்சுமிமேனனுடன் டூயட் பாடிய விஷால், இப்போது நான் சிகப்பு மனிதன் படத்திற்காகவும் டூயட் பாடியுள்ளார். இதையடுத்து, அவர்களுக்கிடையே காதல் தீ பத்திக் கொண்டிருப்பதாக பலவிதமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அதோடு, நான் சிகப்பு மனிதன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு உள்ளிட்ட சிலர், லட்சுமிமேனனை யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார் விஷால். அந்த அளவுக்கு அவரை பொத்தி பொத்தி பாதுகாக்கிறார் என்று மேடையிலேயே கலாய்த்தனர். ஆனபோதும அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை விஷால்.

ஆனால், தற்போது தொடர்ந்து உங்களை இணைத்து காதல் செய்தி பரவிக்கொண்டிருக்கிறதே. நெருப்பில்லாமல் புகையுமா? என்று சில மீடியாக்கள் கேட்டதற்கு, நெருப்பே இல்லை ஆனாலும் புகைய விட்டுக்கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டவர், நானும் லட்சுமிமேனனும் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். எங்களுக்குள் காதல் கத்தரிக்காய் என்று எதுவும் கிடையாது என்று உறுதியாக மறுத்துள்ளார்.

மேலும், காதல் வதந்திகளை கண்டு நான் ஒருபேதும் பயப்படமாட்டேன். அதைகூட பப்ளிசிட்டியாக நினைக்கிறேன் என்கிறார் விஷால்..

Comments