கோச்சடையானுக்கு ‘U’ சான்றிதழ்!!!

20th of March 2014
சென்னை::கே.எஸ்.ரவிகுமாரை பொறுத்தவரை தான் இயக்கிய அனைத்து படங்களிலும் படத்திற்கான கதையை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கிக்கொள்வது தான் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.. ஆனால் முதன்முதலாக அவரே ஒரு கதையை தயார் செய்திருக்கிறார் என்றால் அது சூப்பர்ஸ்டாருக்காகத்தான்.. அதுதான் ‘கோச்சடையான்’. ஆனால் படத்தை மட்டும் தான் அவர் இயக்கவில்லை..
இதனாலேயே ‘கோச்சடையான்’ படம் ரஜினியின் படங்களில் வேறுமாதிரியாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது.. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.. ஏப்ரல் மாதம் ரசிகர்களுக்கு ஒரு வாணவேடிக்கை நிகழ்த்த காத்திருக்கிறார் சூப்பர்ஸ்டார்.

Comments