குக்கூ’ படத்துக்கு ‘U’ சர்டிஃபிகேட்!!!

13th of March 2014
சென்னை::டைரக்டர் லிங்குசாமிகிட்ட உதவி இயக்குனரா வேலைபார்த்த ராஜு முருகன், இயக்குனரா புரமோஷனாகி, டைரக்ட் பண்ணியிருக்க படம் தான் ‘குக்கூ’. இந்த படத்தில ‘அட்டக்கத்தி’ தினேஷ் தான் கதாநாயகனா நடிச்சிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடிச்சிருக்கார்.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் நிறுவனத்தோட இணைஞ்சு தமிழ்ப்படங்களை தயாரிச்சுட்டு வந்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், இப்ப இந்த ‘குக்கூ’ படத்தின் மூலமா நேரடியாவே தயாரிப்புல இறங்கியிருக்கு.
 
சமீபத்துல இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்தப்படத்துக்கு ‘U’ சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க.. படம் மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

Comments