Nedunchalai Movie Press Meet Photos!!!!! ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, அடுத்து இயக்கி உள்ள படம், நெடுஞ்சாலை!!!
25th of March 2014
சென்னை::.Nedunchalai Media Meet Stills, Nedunchalai Press Meet Gallery Pics, Nedunchalai Press Meet
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, அடுத்து இயக்கி உள்ள படம், நெடுஞ்சாலை. பைன் போகஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆரி, ஷிவதா, மலையாள நடிகர் சலீம் குமார், தம்பி ராமையா, பிராஷாந்த் நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநில
நெடுஞ்சாலைகளில் படமாகியுள்ள இந்தப் படம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதுபற்றி கிருஷ்ணா கூறியதாவது: இது வழக்கமான கதையை கொண்ட படம் இல்லை. 1960, 80 மற்றும் இன்றைய காலகட்டங்களில் நடக்கும் கதை. 1960களில் இருந்த சாலைகள் குறுகியதாக இருக்கும். படப்பிடிப்புக்காக அதுபோன்ற சாலையை கண்டுபிடிப்பதில் கஷ்டப்பட்டோம். நிஜ மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படமாக்கி உள்ளேன்.
நெடுஞ்சாலைகளில் வெவ்வேறு மொழி, கலாசார பழக்கவழக்கங்களை இப்போதும் பாக்கலாம். அதை எந்த சமரசமும் இன்றி அப்படியே கொண்டு வந்திருக்கிறோம். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என எல்லாமும் படத்தில் இருக்கும். படம் தாமதம் ஏன் என்று கேட்கிறார்கள். முன்பு போல் இப்போதெல்லாம் படம் ரெடியான மறுநாளே ரிலீஸ் பண்ணும் சூழல் இல்லை. சரியான நேரம் பார்த்துதான் ரிலீஸ் செய்ய முடிகிறது. அதனால் லேட் என்பது ரிலீஸுக்குப் பொருந்தாது.!!
Comments
Post a Comment