இனம் படத்தை திரையிட்டதற்காக மும்பையில் புலி (ltte) தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: அஞ்சான் படப்பிடிப்பு ரத்து!!!!
31st of March 2014
சென்னை::இனம் படத்தை திரையிட்டதற்காக இயக்குனர் லிங்குசாமிக்கு நாடு முழுவதும்
எதிர்ப்பு வலுத்து வருகிறது. லிங்குசாமி தற்போது மும்பையில் சூர்யா,
சமந்தா நடிக்கும் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். நேற்று
மும்பை வி.டி பகுதியில் உள்ள பலார்ட் ஸ்டேட் என்ற இடத்தில் அஞ்சான்
படப்பிடிப்பு நடந்தது. சூர்யா வில்லன்களோடு மோதும் சண்டை காட்சிகள்
படமாக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்ததும், மும்பை புலி (ltte) தீவிரவாதிகளின் ஆதரவு
தமிழ் அமைப்புகளை சேர்ந்த சுமார் 50 பேர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு
சென்று லிங்குசாமிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். இதனால்
லிங்குசாமியின் உதவி இயக்குனர்களுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே
வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழ்நிலை வந்தது.
நிலமை
சீரியசாகவே ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வந்த லிங்குசாமி "உங்கள் உணர்வை
மதிக்கிறேன். படப்பிடிப்பை நிறுத்தி விடுகிறேன். இனம் படத்தை வாபஸ்
பெறுகிறேன்" என்று கூறிவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்தார்.
லிங்குசாமியும், சூர்யாவும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பிறகே
லிங்குசாமி இனம் படத்தை நிறுத்திக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.....
Comments
Post a Comment