சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ.
பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின்
காதலை மையமாக கொண்டது. இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும்
மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்
மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன், பைலட் ஆக போகிறேன் என்கிறார்.
இதுபற்றி
அவர் கூறியிருப்பதாவது: "எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆசையே கிடையாது
விமான பைலட் ஆகணுங்கறதுதான் என்னோட லட்சியம். இப்போது பத்தாம் வகுப்பு
படித்து வருகிறேன். சும்மா ஒரு ஹாபிக்காக நடிக்க வந்தேன். ராஜு முருகன்
சார் கதை சொன்னதும் ஒரு சேலன்ஞ்சுக்காக நடிக்க ஆரம்பிச்சேன். இனி நடிக்கும்
உத்தேசம் இல்லை. ஜெர்மனியில் கமர்ஷியல் பைலட் படிப்புக்கு அப்ளை
பண்ணியிருக்கேன். கிடைச்சதும் போய்விடுவேன். இடையில எனக்கு கேப்
கிடைக்கும்போது குக்கூ மாதிரி சவாலான கேரக்டர் எதுவும் கிடைத்தால் நடிப்பதை
பற்றி யோசிக்கலாம்" என்கிறார் மாளவிகா.
குக்கூவில்
மாளவிகாவின் நடிப்பை பார்த்து விட்டு பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்
அவரது முகவரியை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது மாளவிகாவின் இந்த முடிவு
அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனாலும் மலையாள ஹீரோயின்களின் ஜாதகப்படி
முதல்ல இப்படித்தான் சொல்வாங்க. அப்புறம் நடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அசின்
அறிமுகமானபோது "நான் சொந்தமாக எஸ்டேட் வச்சிருக்கேன் சும்மா நடிக்க
வந்தேன். பெரிய பிசினஸ் உமனாகணுங்றது என் லட்சியம்"னு சொன்னார். அப்புறம்
நடந்தது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் அறிமுகமான லட்சுமி மேனன்.
கும்கிக்கு பிறகு நடிக்க மாட்டேன் எனக்கு படிப்புதான் முக்கியமென்றார்.
இன்றைக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மாளவிகா விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment