தல படத்தை இழந்த அனுஷ்காவுக்கு வந்த அதிர்ஷ்டம்!!!


4th of March 2014
சென்னை::அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய அனுஷ்கா, தற்போது சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது பாஹுபாலி மற்றும் ருத்ரம்மாதேவி படத்திற்கு அதிகளவு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், கவுதம் மேனன் கேட்ட தேதிகளை அனுஷ்காவால் கொடுக்க முடியவில்லை. எனவே அஜீத் பட வாய்ப்பை இழந்தார் அனுஷ்கா.
 
இதனால் பெரும் கவலையில் இருந்த அனுஷ்காவிற்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.  கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து எடுக்கப்போகும் படத்தின் ஹீரோயின் அனுஷ்காதான் என்று கூறப்படுகிறது. அஜீத் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தால் ரஜினி படத்தை மிஸ் செய்ய வேண்டிய நிலை வநதிருக்கும் என்றும், அஜீத் படத்தை மிஸ் செய்ததால்தான் ரஜினியுடன் நடிக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்ததாகவும் அனுஷ்கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஐதராபாத் சென்ற கே.எஸ்.ரவிகுமார், அனுஷ்காவிடம் பேசி சம்மதம் பெற்று, அவரது கால்ஷீட்டையும் பெற்றுவிட்டார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் விளம்பரம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என்றும், அந்த விளம்பரத்தில் ரஜினியோடு அனுஷ்கா இருக்கும் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட கே.எஸ்.ரவிகுமார் முடிவு
 
செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கம்போல் ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments