14th of March 2014
சென்னை::படம் ‘நான் சிவப்பு மனிதன்‘. திரு டைரக்ஷன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. சித்தார்த்ராய் கபூர், விஷால் தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஆடியோவை ரஜினிகாந்த் தனது வீட்டில் வெளியிட்டு பட குழுவினரை பாராட்டினார்.
பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் நடிகர் விஷ்ணு கலந்துகொண்டு பேசினார். அவர் கூறும்போது,‘விஷாலை சந்திக்கும்போதெல்லாம் நான் லட்சுமி மேனன் ரசிகன், என்னை அவரிடம் அறிமுகம் செய்துவை என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பை ஒரு நாளும் எனக்கு விஷால் தரவில்லை. திடீரென்று ஒருநாள் ‘நான் சினப்பு மனிதன்‘ ஷூட்டிங் நடக்கும் தளத்துக்கு சென்றேன். இன்றைக்கு கண்டிப்பாக லட்சுமிமேனனை அறிமுகப்படுத்துவார் என்று நினைத்தேன்.
என்னை பார்த்ததும் வரவேற்ற விஷால் படத்தைபற்றி நீண்ட நேரம் பேசினார். நல்ல சாப்பாடு கொடுத்தார். லட்சுமிமேனனை பற்றி விசாரித்தபோது, இன்றைக்கு அவருக்கு காட்சிகள் இல்லை. அதனால் வரவில்லை‘ என்று சொல்லி ஷாக் கொடுத்தார். சென்ற படத்தில் நண்பர் விக்ராந்துக்கு விஷால் நடிக்க வாய்ப்பு தந்தார். லட்சுமிமேனனுடன் பேச ஆரம்பித்த பிறகு விக்ராந்துக்கு இப்படத்தில் வாய்ப்பு தரவில்லை‘ என்றார்.‘விஷ்ணு ஷூட்டிங் வந்தபோது அன்றைக்கு உண்மையாகவே லட்சுமிமேனன் இல்லை. அவர் சின்னப்பொண்ணு. வயதுக்கு மீறிய தோற்றம் உடையவர். அவரை பார்க்காமல் இருப்பதுதான் விஷ்ணுவுக்கு நல்லது. இல்லாவிட்டால் அவருடைய அப்பாவே அவனை அரஸ்ட் பண்ணி கைவிலங்கு போடற நிலை வரும்‘ என்று நக்கலாக பதில் அளித்தார் விஷால்.

Comments
Post a Comment