குலுமணாலியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘நாய்கள் ஜாக்கிரதை’!!!

8th of March 2014
சென்னை::நாய்கள் ஜாக்கிரதை என்கிற வார்த்தை இந்தியா முழுவதும் எல்லா ஊர்களிலும் அவரவர் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைதான். அதனாலேயே என்னவோ தற்போது சிபிராஜ் நடித்துவரும் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டது.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்புகிறது ‘நாய்கள் ஜாக்கிரதை டீம். இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில் பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த ராணுவ புலனாய்வு நாய் ஒன்று நடிக்கிறது. சொல்லப்போனால் இந்த இறுதிக்கட்ட ஷெட்யூலில் கூட சிபிராஜுக்கு வேலை இல்லையாம். தற்போது இந்த நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் குலுமணாலியில் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.

சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடிக்கிறார். ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்...

Comments