பாலாஜி சக்திவேல் இயக்கும் "ரா... ரா... ரா... ராஜசேகர்' !!!

23rd of March 2014
சென்னை::பாலாஜி சக்திவேல் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்து "ரா... ரா... ரா... ராஜசேகர்' என்கிற வித்யாசமான தலைப்பை சூட்டியிருக்கிறார்.

இதில் லிங்குசாமி அண்ணன் மருமகன் மதி நாயகனாக நடிக்கிறார். "வழக்கு எண் 18/9' படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. முதல் காப்பி அடிப்படையில் பாலாஜி சக்திவேலின் எஸ்.கே.டாக்கீஸ் இப்படத்தை உருவாக்குகிறது.

கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தின் மூலம் மீண்டும் ஒளிப்பதிவுக்கு திரும்புகிறார். படத்தின் மற்ற பாத்திரங்களுக்கு நடிக்க புதுமுகங்களின் தேர்வு நடந்து வருகிறது. பசுமையான மலை மற்றும் வனப்பகுதிகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைப்பதற்காக மட்டும் இரண்டு வருடங்கள் செலவிட்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

Comments