அஜித்தின் புதிய முடிவு!!!

11th of March 2014
சென்னை::அஜித்தின் சமீபத்திய படங்களை கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக தெரியும். ‘மங்காத்தா’வில் வயதை மறைக்காமல் சொன்னார்.. ‘ஆரம்பம்’ படத்தில் அவருக்கு ஜோடியே இல்லை. ‘வீரம்’ படத்தில் தம்பிகளுக்காக திருமணம் செய்யாமல் இருப்பார்.. இதிலெல்லாம் தனது வயதை மறைக்கவோ தனது தோற்றத்தை மாற்றவோ எந்தவித முயற்சியும் செய்திருக்க மாட்டார் அஜித்.
ஆனால் இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் மட்டும் இந்த கெட்டப்பிற்கு விடுதலை கொடுக்க இருக்கிறார் அஜித். காரணம் இதில் ‘யூத்ஃபுல்’லான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக ஜிம்மிற்கு தினசரி சென்று தனது உடல் எடையையும் குறைக்கும் முயற்சியில் இருக்கிறார் அஜித்.
ஆனாலும் அடுத்தடுத்த தனது படங்களில் தன் வயதுக்கு ஏற்றமாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே முடிவு செய்திருக்கிறாராம் அஜித். காரணம் இனி தான் காலேஜ் படிக்கும் மாணவனாக எல்லாம் நடித்தால் நன்றாக இருக்காது என்பதில் தெளிவாக இருக்கிறார் அஜித். சரி.. அஜித் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். ....

Comments