சென்னை::தமிழில் ‘ஜெயம்‘, ‘அந்நியன்‘, ‘திருப்பதி‘, ‘வர்ணஜாலம்‘, ‘பிரியசகி‘ உள்ளிட்ட படங்களில் நடித்தார் சதா. அஜீத், விக்ரம் என பிரபல நடிகர்களுடன் நடித்தும் சதாவுக்கு வாய்ப்பு குவியவில்லை. இந்நிலையில் விஷால் நடித்துள்ள ‘மத கஜ ராஜா‘ படத்தில் கெஸ்ட் ரோல் வேடம் ஏற்றார். இப்படம் வெளிவராமல் முடங்கி உள்ளது. சதா கூறியது:
மலையாளத்தில் ஹசிம் மோரிகர் இயக்கும் படத்தில் நான் நானாகவே நடிக்கிறேன். ‘நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?‘ என்கிறார்கள். நிறைய படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். ஜெயராமன் ஜோடியாக புதிய மலையாள படமொன்றிலும் நடிக்கிறேன். இப்படம் பற்றி இயக்குனர் நோவெல் சொன்ன கதை பிடித்ததால் உடனே
ஏற்றுக்கொண்டேன். எனக்கு நடனம் என்றால் பிடிக்கும். நடன பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வருகிறேன். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றார்.‘ஜெயம் படத்தில் அறிமுகமானபோது சதாவுக்கு ரசிகர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர்.
அவரது கிராமத்து பாங்கான முகம்தான் இதற்கு காரணம். ஆனால் அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் படுகிளாமர் வேடம் ஏற்றதால் கிராமத்து பெண் இமேஜை இழந்தார். இது அவருக்கு மைனஸாக அமைந்துவிட்டதுÕ என்றார் ஒரு இயக்குனர்...

Comments
Post a Comment