19th of March 2014
சென்னை::ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக மட்டும் இல்லாமல் ‘ஆரோகணம்’ என்ற படத்தை எடுத்து திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். பல இயக்குநர்கள், விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றது இந்தப்படம். இப்போது தனது அடுத்த படத்திற்கான டைரக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் லட்சுமி.
தனது புதிய படத்திற்கு ‘நெருங்கிவா.. முத்தமிடாதே’ என பெயர் வைத்துள்ளார் லட்சுமி. இந்தப்படத்தில் பியா மற்றும் ஸ்ருதி ஹரிகரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.. இந்தப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். வரும் மார்ச் 27ஆம் தேதி படப்பிடிப்பை துவங்க இருகிறார் லட்சுமி.
இந்தப்படத்தை நூறு சதவீதம் கமர்ஷியல் படமாக எடுக்க இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், இதற்கு முன் வந்த பெண் இயக்குனர்கள் கையாண்ட கதைக்களங்களை விட்டு விலகி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு பொழுதுபோக்கு படமாக இதை இயக்குவேன் என்கிறார். இந்தப்படம் தற்போது சமூகத்தில் பற்றி எரியக்கூடிய விஷயம் ஒன்றை மையப்படுத்தி இருக்கும் என்றும் ஒரு திரியை கொளுத்திப் போடுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
Comments
Post a Comment