14th of March 2014சென்னை::இந்திய சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் பாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ஆமிர்கான். ‘தி மேன் வித் மிதாஸ் டச்’. என்றுதான் ஆமிர்கானை அழைக்கிறார் அவரது நண்பரான சல்மான்கான். காரணம் அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான். இந்த பாலிவுட் மார்க்கண்டேயன் இன்று தனது 49வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
ரசிகர்கள் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் உன்னிப்பாக கவனித்து வருவதால் தனது படங்களின் கதையில் கூடுதல் கவனம் செலுத்துபவர் ஆமிர்கான். அதனால் ஒரு படம் முடித்தபின்னர் தான் அடுத்த படத்திற்கு போவது என்பதை பாலிஸியாகவே வைத்திருக்கிறார்..
கயாமத் சே கயாமத் தக்’ முதல் ‘தூம்-3’ வரையிலான அவரது பயணத்தில், பர்சனல் வாழ்க்கையாகட்டும் சினிமாவாகட்டும் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறார். ஆனாலும் அவருக்கான இடம் அவருக்கே அவருக்கென ஒதுக்கப்பட்ட ஒன்று. திரைப்படங்களைத் தாண்டி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘சத்யமேவ ஜெயதே’ மூலம் சமூக மாற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
இன்று பிறந்தநாள் காணும் ஆமிர்கானுக்கு poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..
Comments
Post a Comment