உங்களுக்கு முடியாது சிவகார்த்திகேயனுக்கு பண்ணலாம்: தனுசுக்கு புரிந்த நிஜம்!!!

11th of March 2014
சென்னை::தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. கிட்டதட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்திற்காக அண்மையில் சில கோடிகள் பைனான்ஸ் தேவைப்பட்டதாம் தனுசுக்கு. விநியோகஸ்தர்களிடம் கேட்டுபார்க்கலாம் என்ற நம்பிக்கையில் போன் போட்டவருக்கு பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூட  பரவாயில்லை. அவர்கள் சொன்ன பதிலால் தனுஷ் நிலை குலைந்தாராம். சார் நீங்க தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற டாணா படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம்.  ஆனால் நீங்க நடிக்கிற வேலையில்லா பட்டதாரிக்கு எங்களால் பணம் தர முடியாது என்றார்களாம்.

தமிழ்சினிமாவில் தன்னோட இடம் எங்கே போய்கொண்டிருக்கிறது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டாராம் தனுஷ்.    இருந்தாலும் தன் நண்பன் நல்ல இடத்திற்கு உயர்ந்துள்ளாரே என்று சந்தோஷப்பட்டதோடு இல்லாமல் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஆடப் போகிறாராம்....

Comments