18th of March 2014
சென்னை::ரஜினி நடிக்கும் கோச்சடையான் படம் கோடைவிடுமுறை விருந்தாக ஏப்ரல் 11 ஆம்
தேதி வெளிவருவதாக சொல்லப்பட்டது. தற்போது கிடைத்த புதிய தகவலின்படி,
கோச்சடையான் படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பே இல்லையாம். என்ன காரணம்?
கோச்சடையான் படத்துக்கு ஆரம்ப முதலீடு செய்தது மும்பையைச் சேர்ந்த ஈராஸ் படநிறுவனம்.
அதன் பிறகு கோச்சடையான் படத்தை ரஜினி சார்பாக மீடியா ஒன் நிறுவனம்
அண்டர்டேக் பண்ணியது. அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கோச்சடையான்
படத்தை வெளியிடுவதற்கு முன் சுமார் 50 கோடியை ஈராஸ் நிறுவனத்துக்கு ரஜினி
திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்த பிறகுதான் கோச்சடையான் படத்தை
ரஜினியால் ரிலீஸ் செய்ய முடியுமாம்.
தற்போதைய சூழலில் 50 கோடியை தியேட்டர்காரர்களிடமிருந்து அட்வான்ஸ் தொகையாக வாங்கினால்தான் ஈராஸ் நிறுவனத்துக்குக் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும்.
தற்போதைய சூழலில் 50 கோடியை தியேட்டர்காரர்களிடமிருந்து அட்வான்ஸ் தொகையாக வாங்கினால்தான் ஈராஸ் நிறுவனத்துக்குக் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும்.
ஆனால்
தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து அவ்வளவு பெரிய தொகை கிடைக்க வாய்ப்பில்லை
என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இந்தப் பிரச்னையின் காரணமாக, ஏப்ரல் மாதம்
கோச்சடையான் வெளிவராது என்று உறுதியாக கூறுகிறார்கள். இந்தத் தகவலை உண்மை
என்று நம்ப வைப்பதுபோல், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கோச்சடையான்
படத்துக்காக இன்னும் தியேட்டர்காரர்களை அணுகாமலே இருக்கிறார்கள்.

Comments
Post a Comment