சென்னை::இந்தியில் வெற்றிபெற்ற படம் ‘ஆஷிகி 2‘. தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கிறார். ஜெய ரவீந்திரா டைரக்ஷன். இதில் ஹீரோயினாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்ய எண்ணினர். ஆனால் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டதாக சமீபத்தில் தமன்னா தெரிவித்திருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு புதுமுக நடிகை நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்யவில்லை என சச்சின் கூறினார். இந்நிலையில் ஹீரோயினாக கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச இந்திய அழகியாக தேர்வான அங்கிதா ஷோரே ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுபற்றி அங்கிதா கூறும்போது,‘ஆஷிகி 2 இந்தி படத்திலேயே நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஹீரோயின் தேர்வின் போது சிறுதவறுகள் செய்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தெலுங்கில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும் ஆடிஷனுக்கு வந்தேன். அப்போது பட குழு எதிர்பார்த்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினேன். பிடித்து விடவே என்னை தேர்வு செய்தனர். தெலுங்கில் சில வசனங்கள் கொடுத்து பேச சொன்னார்கள். நான் பஞ்சாபில் பிறந்து லடாக்கில் வளர்ந்தவள். ஆனாலும் அவர்கள் தந்த வசனத்தை நன்கு உச்சரித்தேன். அதுவும் அவர்களுக்கு பிடித்தது. உடனடியாக என்னை ஹீரோயினாக்கி விட்டனர். ஆடிஷனில் இவ்வளவு தான் என்னால் நடிக்க முடியும் என்று எண்ணியதைவிட அதிகமாகவே செய்துவிட்டேன். இது எனது அதிர்ஷ்டம்‘ என்றார்.
Comments
Post a Comment