முடிவுக்கு வருது கவுதம் மேனன் - ஹாரிஸ் மோதல்!!!

18th of March 2014
சென்னை::கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மோதல் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
 
மின்னலே படம் தொடங்கி கவுதம் மேனனின் எல்லா படத்துக்கும் இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். திடீரென சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார் கவுதம். இது ஹாரிசுக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே பணப் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மோதிக் கொண்டனர். ஒருவரை தாக்கி ஒருவர் கருத்து தெரிவித்து விலகினர்.
 
இந்நிலையில் இப்போது இருவரும் சேர்ந¢து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இசையமைக்க முதலில் ரஹ்மானிடம்தான் கவுதம் பேசினார். ஆனால் மற்ற படங்களில் ரஹ்மான் பிசியாக இருக்கிறார். இதனால் இந்த படத்துக்கு அவர் இசையமைப்பது சந்தேகம் என கூறப்படுகிறது.
 
இதனால் மீண்டும் ஹாரிசுடன் இணைய கவுதம் விரும்புகிறாராம். சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் தராத ஹாரிசும் கவுதம் படத்தில் அஜீத் நடிப்பதால் அதில் இணைவது மூலம் ஃபாமுக்கு திரும்பலாம் என நினைக்கிறாராம். இது தொடர்பாக இருவர் தரப்பிலும் பேச்சு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 

Comments