27th of March 2014
சென்னை::காஞ்சனா படத்திற்கு பிறகு ஒன்பதுல குரு படத்தில் நடித்த
லட்சுமிராய்க்கு அதையடுத்து கோடம்பாக்கம் கைகொடுக்கவில்லை. அதனால்
கன்னடம், இந்தி என்று படவாய்ப்புகளுக்காக படையெடுத்தவர், அங்கு தன்னை
யாரும் கண்டு கொள்ளாததால் மறுபடியும் கோலிவுட் கோதாவில்
குதித்திருக்கிறார்.
சில படங்களில் இடம்பிடிக்க
படுபயங்கரமாக களமிறங்கிய லட்சுமிராய் புது வரவு நடிகைகளின் அதிரடியினால்
தோற்றுக்கொண்டேயிருந்தவர், இப்போது அதர்வா நடிக்கும் இரும்புக்குதிரை
படத்தை கைப்பற்றி விட்டார். இப்படத்தில் நாயகி வேடத்துக்காகத்தான் முதலில்
முண்டியடித்தார் லட்சுமிராய். ஆனால், அதர்வாவுக்கு முன்னாடி அவரை
நிறுத்தினால் அக்கா மாதிரி இருப்பார் என்பதால் அதற்கு யாரும் உடன்படவில்லை.
அதனால் அந்த வேடம் ப்ரியாஆனந்துக்கு எளிதாக கிடைத்து விட்டது.
அதனால்,
அதே படத்தில் இன்னொரு வில்லி வேடம் உள்ளது என்று டைரக்டர் சொன்னபோது,
அந்த ரோல் பற்றி கேட்ட லட்சுமிராய், அதுவும் கதைக்கு முக்கியத்துவம்
வாய்ந்த வேடம் என்பதால் உடனே ஒத்துக்கொண்டார். மேலும், பைக் ரேஸை
மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கும்
அதர்வாவுக்கு போட்டியாக லட்சுமிராயும் குதிக்கிறாராம். இதற்காக சரியான
ட்ரெய்னரை வைத்து 2 வாரங்களாக முறையாக பயிற்சி பெற்று வரும் லட்சுமிராய்,
விரைவில் பைக் ரேஸ் காட்சிகளில் நடிக்கப்போகிறாராம்...
ஒன்பதுல குரு’ படத்துக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் கொஞ்ச நாட்களாக நடிகை லட்சுமிராயை ஆளையே பார்க்கமுடியவில்லை.. லாரன்ஸின் முனி மூன்றாம் பாகமான ‘கங்கா’ படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், மலையாள சினிமாவில் முழுநேர நடிகையாகி விட்ட லட்சுமிராய், தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் தற்போது அவர் நடித்துக்கொண்டிருப்பது அதர்வா நடிக்கும்‘இரும்பு குதிரை’,மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை’ என இரண்டு படங்களில்தான். இதில் இரும்பு குதிரை’ படத்திலிருந்து லட்சுமிராய் விலகிவிட்டார் என்ற செய்திகளும் சில நாட்களுக்கு முன் வெளியானது.
கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு அவர் இல்லாமலேயே முடிந்துவிட்ட நிலையில் தற்போது லட்சுமிராய் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி மீண்டும் உறுதியாகியுள்ளது. இடையில் என்ன நடந்ததாம்..? இந்தப்பட்த்தில் இன்னொரு கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்தாலும் லட்சுமி ராக்கான கதாபாத்திரமும் முக்கியமானது தான்.
ஆனால் படப்பிடிப்பு நீண்டநாட்கள் நடைபெறும், அதனால் காலதாமதமாகும் என்பதால் தான் லட்சுமிராய் முதல் இந்தப்படத்தில் இருந்து வெளியேறினாராம். அதற்கேற்ற மாதிரி சமீபத்தில் தான் இத்தாலியில் கிட்டத்தட்ட 30 நாட்கள் நீண்ட்தொரு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
இனிமேல்தான் லட்சுமிராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதுவும் வெறும் 12 நாட்கள் படப்பிடிப்புதானாம். இந்த இடைவெளியில் லட்சுமிராய்க்கு மாற்றாக வேறு ஒரு நடிகையை தேடிப்பார்த்தும் ஒருவரும் செட் ஆகவில்லை. இதனால் லட்சுமிராயையே மீண்டும் அணுக, அவரும் எந்தவித பிகுவும் பண்ணாமல் ஓகே சொல்லிவிட்டாராம்.. அதனால் ‘இரும்பு குதிரை’யில் லட்சுமிராயின் சவாரி நிச்சயம் உண்டு..

Comments
Post a Comment